அரசு வேலை தேடும் பல இளைஞர்களுக்கு ‘NSQF Level 1 Certificate’ என்பது ஒரு பெரிய புதிராகவே உள்ளது. இணையத்தில் தேடித் தேடி அலுத்துவிட்டீர்களா? இனி நீங்கள் அலையத் தேவையில்லை.
இந்த ஒரே கட்டுரையில், NSQF Level 1 சான்றிதழ் என்றால் என்ன, அதன் முக்கியத்துவம், அதை எப்படி முறைப்படி பெறுவது மற்றும் போலி சான்றிதழ்களிடம் இருந்து எப்படி உங்களைப் பாதுகாத்துக் கொள்வது என்பது வரை அனைத்தையும் படிப்படியாக விளக்கப் போகிறேன்.
இதை முழுசா படிச்சீங்கன்னா, உங்களுக்கு ஒரு தெளிவான ஐடியா கிடைத்துவிடும்.
Table of Contents
NSQF என்றால் என்ன?
NSQF-ன்னா National Skills Qualification Framework. இது இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு கட்டமைப்பு. சிம்பிளா சொல்லணும்னா, நம்மளோட திறமைகளை (Skills) முறைப்படுத்தி, அதுக்கு ஒரு தகுதியை (Qualification) கொடுக்கிற சிஸ்டம் இது.
எப்படி நம்ம படிப்பில 10வது, 12வது, டிகிரி, மாஸ்டர் டிகிரினு படிப்படியா போறோமோ, அதே மாதிரி Skill Education லயும் ஒவ்வொரு லெவலா முன்னேற NSQF உதவுது. Level 1-ல ஆரம்பிச்சு, டிப்ளமோ, அட்வான்ஸ்டு டிப்ளமோன்னு அடுத்தடுத்த கட்டத்துக்குப் போகலாம்.
NSQF Level 1 Certificate என்றால் என்ன?
இதுதான் இந்த NSQF கட்டமைப்பின் முதல் படி. ஒரு குறிப்பிட்ட துறையில் உங்களுக்கு அடிப்படை அறிவும்,Practical Skills இருக்குன்னு நிரூபிக்கிற ஒரு ஆதாரம் தான் இந்த NSQF Level 1 Certificate. இது ஒரு Entry-Level வேலைகளுக்கு ரொம்பவும் முக்கியமானது.
NSQF Level 1 Certificate ன் நோக்கம் மற்றும் தேவை என்ன?
BSF Tradesman, CRPF Tradesman போன்ற பாதுகாப்புப் படை வேலைகளில Kitchen Related பணிகளுக்கு இந்த சர்டிஃபிகேட் கண்டிப்பா தேவைப்படுது.
எந்தெந்த வேலைகளுக்கு NSQF Level 1 Certificateதேவை?
- Cook (சமையலர்)
- Water Carrier (தண்ணீர் கொண்டு செல்பவர்)
- Waiter ( உணவு பரிமாறுபவர்)
பொதுவாக கிச்சன் சர்வீஸ் தொடர்பான பணிகளுக்கு இது தேவை.
கல்வித் தகுதியுடன் ஒப்பிடுதல்
NSQF லெவல்களை நம்ம வழக்கமான கல்வித் தகுதியோடு ஒப்பிட்டுப் பார்த்தா, இன்னும் ஈஸியா புரியும்.
- NSQF Level 1 = 9வது வகுப்புக்கு சமம்.
- NSQF Level 2 = 10வது வகுப்புக்கு சமம்.
- NSQF Level 3 = 11வது வகுப்புக்கு சமம்.
- NSQF Level 4 = 12வது வகுப்புக்கு சமம்.
இதற்கு மேல Level 5-ன்னா டிப்ளமோ, Level 6-ன்னா அட்வான்ஸ்டு டிப்ளமோ. இப்படி படிப்படியா போகும்.
Curriculum – Food Production (Cook)
சரி, இந்த NSQF Level 1 course in food production kitchen-ல என்னதான் சொல்லிக் கொடுப்பாங்க? வாங்க பார்க்கலாம்.
- கிச்சன் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு (Kitchen Cleanliness and Safety): ஒரு கிச்சனை எப்படி சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் வெச்சுக்கிறதுன்னு சொல்லிக் கொடுப்பாங்க.
- சமையல் நுட்பங்கள் (Cooking Techniques): அடிப்படையான சமையல் முறைகளைப் பற்றி கத்துக்கலாம்.
- காய்கறி வெட்டும் முறைகள் (Vegetable Cutting): விதவிதமா காய்கறிகளை எப்படி வெட்டணும், சமையலுக்கு எப்படி தயார் செய்யணும்னு பயிற்சி கொடுப்பாங்க.
- பாத்திரம் கழுவுதல் மற்றும் கிச்சன் ஒழுங்கமைப்பு (Dishwashing & Kitchen Organization): பாத்திரங்களைச் சுத்தமாக கழுவுவது மற்றும் கிச்சனை ஒழுங்காக பராமரிப்பது பற்றி சொல்லிக் கொடுப்பாங்க.
- Gas மற்றும் Electric சாதனங்கள் பயன்பாடு: கிச்சன்ல இருக்கிற கேஸ் ஸ்டவ், மிக்சி, கிரைண்டர் போன்ற சாதனங்களை பாதுகாப்பா எப்படி பயன்படுத்துறதுன்னு பயிற்சி அளிக்கப்படும்.
- தனிப்பட்ட சுகாதாரம் (Personal Hygiene): சமைக்கும்போது தனிப்பட்ட சுகாதாரத்தை எப்படி கடைபிடிக்கணும் என்பது ரொம்ப முக்கியம். அதை வலியுறுத்துவாங்க.
- உணவு சேமிப்பு மற்றும் பரிமாறுதல் (Food Storage and Presentation): சமைத்த உணவையும், சமைக்காத பொருட்களையும் எப்படி கெட்டுப் போகாமல் சேமிப்பது, உணவை எப்படி அழகா பரிமாறுவதுன்னும் கத்துக்கலாம்.
Course Duration
பொதுவாக இந்த கோர்ஸின் காலம் 1 முதல் 3 மாதங்கள் வரை இருக்கும். அதாவது, தோராயமாக 300 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும்.
Eligibility & Documents
இந்த கோர்ஸில் சேர 10வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அட்மிஷனுக்குத் தேவையான முக்கிய ஆவணங்கள்:
- ஆதார் கார்டு (Aadhaar Card): இது கட்டாயம்.
- 10வது மதிப்பெண் சான்றிதழ் (10th Marksheet).
- 12வதுமதிப்பெண் சான்றிதழ் (12th Marksheet – தேவைப்பட்டால்).
- ஒரு புகைப்படம் (One Photo).
NSQF Level 1 Certificate ஐ பெறுவது எப்படி?
இதுதான் மிக முக்கியமான பகுதி. கவனமாகக் கேளுங்க.
- Issuing Authority: இந்த சர்டிஃபிகேட்டை National Skill Development Corporation (NSDC) அல்லது NSDC-யால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பயிற்சி நிறுவனம் (Institute) தான் வழங்க வேண்டும். NSDC என்பது இந்திய அரசின் கீழ் இயங்கும் ஒரு அமைப்பு.
- பயிற்சி மையத்தைக் கண்டுபிடிப்பது எப்படி?:
- NSDC-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான nsdcindia.org-க்குச் செல்லுங்கள்.
- அங்கே “Find A Training Centre” அல்லது “Find A Training Partner” என்ற ஆப்ஷனைப் பயன்படுத்தி, உங்கள் மாநிலம் மற்றும் மாவட்டத்தில் உள்ள பயிற்சி மையங்களைத் தேடலாம்.
- “Food Processing” செக்டாரின் கீழ் “NSQF” கோர்ஸ்களைத் தேடுங்கள்.

Admission Process:
- Registration: தேவையான ஆவணங்களைக் கொடுத்து பதிவு செய்ய வேண்டும்.
- Training: முறையான பயிற்சி எடுக்க வேண்டும். Online அல்லது Offline-ல் பயிற்சி எடுக்கலாம். ஆனால், பயிற்சி எடுக்காமல் சர்டிஃபிகேட் வாங்க மட்டும் நினைக்காதீங்க.
- Exam: பயிற்சி முடிந்ததும், ஒரு தேர்வு (Exam) வைப்பார்கள். இது பொதுவாக 30 கேள்விகள் கொண்ட Multiple-Choice தேர்வாக இருக்கும். தேர்வு நேரம் 1 மணி நேரம்.
- Certificate: தேர்வில் பாஸ் செய்தால் மட்டுமே உங்களுக்கு ஒரிஜினல் சர்டிஃபிகேட் கிடைக்கும். முதலில் உங்கள் WhatsApp-க்கு சர்டிஃபிகேட் அனுப்பப்படும். பிறகு, Hard Copy உங்கள் வீட்டு முகவரிக்கு Speed Post-ல் வரும்.
எச்சரிக்கை: Soft copy-ஐ நீங்களே பிரிண்ட் எடுத்துக்கலாம்னு சொன்னா நம்பாதீங்க. Original Certificate நிறுவனத்திடமிருந்து Hard Copy-ஆக தான் வரும்.
NSQF Certificate How to Verify?
இன்னைக்கு நிறைய Fake Certificates வலம் வருது. காசு கொடுத்து ஏமாந்து, கடைசியில வேலையையும் இழக்க நேரிடும். அதனால், ஒரு Certificate உண்மையானதா இல்லையான்னு எப்படி கண்டுபிடிக்கிறதுன்னு தெரிஞ்சுக்கோங்க.
Original Certificate ல் என்ன இருக்கும்?

- QR Code: இதுதான் இப்போதைய லேட்டஸ்ட் டெக்னாலஜி.
- ஏப்ரல் 1, 2023-க்குப் பிறகு வந்த சிஸ்டம்: இந்த QR Code-ஐ ஸ்கேன் செய்தால், ஒரு லிங்க் மட்டும் வரும். அந்த லிங்கை கிளிக் செய்தால், அது உங்களை Skill India Digital-ன் அதிகாரப்பூர்வ அரசாங்க வெப்சைட்டுக்கு (gov.in என முடியும்) கொண்டு செல்லும். அங்கே உங்கள் பெயர், கோர்ஸ் விவரங்களுடன் ஒரு வெரிஃபிகேஷன் டிக் மார்க் இருக்கும். இதுதான் 100% ஒரிஜினல்.
- Candidate ID: CAN_123456… என்பது போன்ற ஒரு தனிப்பட்ட Candidate ID இருக்கும்.
- Logos: Skill India மற்றும் NSDC லோகோக்கள் இருக்கும்.
- Watermarks: ஒரிஜினல் Hard Copy-ல் வாட்டர்மார்க்ஸ் இருக்கும்.
- கையொப்பங்கள்: Controller of Examination போன்ற அதிகாரிகளின் கையொப்பம் இருக்கும்.
Fake Certificate ல் என்ன இருக்கும்?

- அரசு சின்னம் (Government Logo): அரசாங்கம் வழங்கும் NSDC சர்டிஃபிகேட்டில் இந்திய அரசின் சின்னம் (மூன்று சிங்கங்கள்) இருக்காது. அப்படி இருந்தால், அது போலி.
- தவறான QR Code சிஸ்டம்: QR Code-ஐ ஸ்கேன் செய்தவுடன், எந்த ஒரு அரசாங்க வெப்சைட்டுக்கும் போகாமல், நேரடியாக உங்கள் பெயர், பயிற்சி மையம், தேதி போன்ற விவரங்கள் திரையில் தெரிந்தால், அது பழைய சிஸ்டம். அதை யார் வேண்டுமானாலும் போலியாக உருவாக்க முடியும். இதுதான் மிகமுக்கியமான பாயிண்ட், ஏமாந்து விடாதீர்கள்.
- தவறான Codes: சர்டிஃபிகேட்டில் “CP Code” என்று ஏதாவது இருந்தால் அது போலி.
- குறுக்கு வழி: 5 நாள், 10 நாள்ல சர்டிஃபிகேட் தர்றோம், பரீட்சை, டிரெய்னிங் எதுவும் வேண்டாம்னு சொன்னா, அது நிச்சயம் போலி.
போலி சர்டிஃபிகேட்டால் வரும் விளைவுகள்:
- 3 முதல் 5 வருடங்களுக்கு அரசுத் தேர்வுகளில் இருந்து தடை செய்யப்படலாம்.
- வேலையில் சேர்ந்த பிறகு கண்டுபிடித்தால் கூட, எந்தவித நஷ்டஈடும் இல்லாமல் வேலையை விட்டு நீக்கப்படுவீர்கள்.
நம்பகமான பயிற்சி மையங்கள்:
நிறைய மாணவர்கள் கேட்கிற கேள்வி, “எந்த இன்ஸ்டிடியூட் நம்பிக்கையானது?” என்பதுதான்.
கீழே கொடுக்கப்பட்ட நிறுவனங்கள் இந்தியா முழுவதும் NSQF Level 1 கோர்ஸ்களுக்கு NSDC யால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களாக விளங்குகிறது.
🏢 Career Point Institute of Skill Development
📍 Address: Indra Prastha Industrial Area, Kota, Rajasthan
💼 Centre Manager: Siddhant Jain
📞 Contact: 9057531994
📧 Email: siddhant.jain@cpuniverse.in
🏢 Kraftivity The Art To Create
📍 Address: WZ-553A Naraina Village near Aravali Public School, New Delhi, Delhi
💼 Centre Manager: Suraj Chaubey
📞 Contact: 6393482939
📧 Email: hr.mascotskill@gmail.com
🏢 Mascot Skill Academy
📍 Address: Aaraji No 251, Samudawa Taktaiya, Sakteshghar, Chunar, Mirzapur, Uttar Pradesh
💼 Centre Manager: Suraj Chaubey
📞 Contact: 6393482939
📧 Email: surachj9450@gmail.com
- தேவைப்பட்டால், NSDC-யின் Helpline Number க்கு கால் செய்து மேற்கூறிய நிறுவனங்கள் பற்றி நீங்களே விசாரிக்கலாம்.
- இவர்கள் முறையான பயிற்சி, செய்முறை வகுப்புகள் மற்றும் தேர்வு நடத்தி Original Certificates வழங்குவதை உறுதி செய்கிறார்கள்.
மாணவர்களுக்கான முக்கிய ஆலோசனைகள்
- குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்காதீர்கள்: நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்த நினைக்கிறேன் என்று சொல்லி, பயிற்சி இல்லாமல் நேரடியாக சர்டிஃபிகேட் வாங்காதீர்கள். அது உங்கள் எதிர்காலத்தையே பாழாக்கிவிடும்.
- ஆதார் மற்றும் 10th Marksheet: அட்மிஷன் போடும் முன், உங்கள் ஆதார் கார்டிலும், 10வது மார்க்ஷீட்டிலும் உங்கள் பெயர், அப்பா பெயர் ஆகியவை எழுத்துப் பிழை இல்லாமல் ஒரே மாதிரி இருக்கிறதா என்று சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
- ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்: உங்கள் ஆதார் கார்டுடன் உங்கள் சொந்த மொபைல் எண்ணை இணைத்திருப்பதை உறுதி செய்யுங்கள். குடும்பத்தில் உள்ள வேறு யாருடைய நம்பரையாவது கொடுத்தால், KYC செய்யும்போது பிரச்சனைகள் வரலாம்.
- சரியான வழிகாட்டுதல்: பயத்தை உண்டாக்கி பணம் பறிக்கும் இடங்களைத் தவிர்த்து, முறையான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்கும் நிறுவனங்களைத் தேர்ந்தெடுங்கள்.
NSQF Certificate என்பது உங்கள் திறமைக்கு கிடைக்கும் ஒரு அங்கீகாரம். அதுவும் NSQF Level 1 Certificate பல அரசு வேலைகளுக்கு ஒரு நுழைவுச் சீட்டு. ஆனால், அந்த நுழைவுச் சீட்டு உண்மையானதாக இருக்க வேண்டும். சரியான பாதையில், முறையான பயிற்சி பெற்று, உண்மையான சர்டிஃபிகேட்டைப் பெறுங்கள். உங்கள் உழைப்புக்கும், திறமைக்கும் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
வாழ்த்துக்கள்!
FAQs
Paramilitary Forces Cook (சமையலர்) பணிக்கு இது தேவையா?
ஆம், கட்டாயம்.
Paramilitary Forces Tailor/Barber பணிக்கு தேவையா?
தேவையில்லை.
சான்றிதழ் யார் வழங்குவது?
NSDC
கோர்ஸ் காலம் எவ்வளவு?
3 மாதங்கள்.
தேர்வு உண்டா?
ஆம், உண்டு.
ஒரிஜினலை எப்படி சரிபார்ப்பது?
QR Code ஸ்கேன்

