BSF Tradesman Recruitment 2025 notification வந்தாச்சு! இந்த வாய்ப்பை எப்படி கரெக்டா யூஸ் பண்றது, என்னென்ன eligibility, எப்படி apply பண்றதுனு A to Z Detail ஆ பார்க்கலாம், வாங்க!
Table of Contents
Why BSF?
- Job Security: இது ஒரு நிரந்தரமான மத்திய அரசுப் பணி.
- Good Salary & Allowances: நல்ல சம்பளத்தோடு, மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் இதர படிகளும் உண்டு.
- Medical Facilities: உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் முழு மருத்துவ வசதியும் செய்து தரப்படும்.
- Adventure: ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சவாலை சந்திப்பீர்கள்.

BSF Constable Tradesman Recruitment 2025
| Feature | Details |
| Post Name | Constable (Tradesman) |
| Total Vacancies | 3588 (Male & Female) |
| Application Mode | Online Only |
| Application Start Date | July 26, 2025 |
| Application Last Date | August 25, 2025 |
| Educational Qualification | 10th Pass |
| Age Limit | 18 to 25 years (Age relaxation applicable) |
| Salary | Level-3 (Rs. 21,700 – Rs. 69,100) |
| Official Website | rectt.bsf.gov.in |
Vacancy:
மொத்தம் 3588 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஆண்கள், பெண்கள் இருவருக்கும் வாய்ப்புள்ளது.
MALE Vacancies (Total – 3406)
- Constable (Cook): 1462
- Constable (Water Carrier): 699
- Constable (Washerman): 320
- Constable (Barber): 115
- Constable (Sweeper): 652
- Constable (Cobbler): 65
- Constable (Tailor): 18
- Constable (Carpenter): 38
- Constable (Plumber): 10
- Constable (Painter): 5
- Constable (Electrician): 4
FEMALE Vacancies (Total – 182)
- Constable (Cobbler): 2
- Constable (Tailor): 1
- Constable (Carpenter): 1
- Constable (Cook): 82
- Constable (Water Carrier): 38
- Constable (Washerman): 17
- Constable (Barber): 6
- Constable (Sweeper): 35
Eligibility Criteria:
- Educational Qualification:
- For Trades of Constable (Cook), Constable (Water Carrier), Constable (Waiter): 10th Pass + National Skills Qualifications Framework (NSQF) level-1 Course in food production or Kitchen from National Skill Development Corporation (NSDC) அங்கீகாரம் பெற்ற institute-ல முடித்திருக்க வேண்டும்.
- For Trades of Constable (Carpenter), Constable (Plumber), Constable (Painter), Constable (Electrician), Constable (Pump Operator), Constable (Upholster): 10th Pass + சம்பந்தப்பட்ட trade-ல் இரண்டு வருட ITI certificate அல்லது ஒரு வருட ITI certificate உடன் ஒரு வருட work experience தேவை.
- For other Trades (Cobbler, Tailor, Washerman, Barber, Sweeper): 10th Pass மட்டும் போதும், ஆனால் அந்தந்த trade-ல் நீங்கள் திறமையானவராக இருக்க வேண்டும் (must be proficient) மற்றும் Trade Test-ல் பாஸ் செய்ய வேண்டும்.
Age Limit:
- பொதுவாக, விண்ணப்பிக்கும் கடைசி தேதியில் உங்கள் வயது 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
- Age Relaxation: அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
- OBC: 3 ஆண்டுகள் தளர்வு உண்டு, எனவே நீங்கள் 28 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
- SC/ST: 5 ஆண்டுகள் தளர்வு உண்டு, எனவே நீங்கள் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
Selection Process:
Success-க்கு proper planning அவசியம். இந்த தேர்வு பல முக்கிய கட்டங்களாக நடக்கும். ஒவ்வொரு கட்டமும் ரொம்ப முக்கியம்.
Phase 1: Physical Standard Test (PST) & Physical Efficiency Test (PET)
இதுதான் முதல் தடை. இதில் தகுதி பெற்றால்தான் அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியும்.
- PST (Physical Standards):
- Male: உயரம் – 165 cms, மார்பளவு – 75-80 cms.
- Female: உயரம் – 155 cms.
- (Note: ST, வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் போன்ற சில பிரிவினருக்கு உயரம் மற்றும் மார்பளவில் தளர்வுகள் உண்டு).
- PET (Physical Efficiency):
- Male: 5 கி.மீ தூரத்தை 24 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும்.
- Female: 1.6 கி.மீ தூரத்தை 8 நிமிடங்கள் 30 வினாடிகளில் ஓடி முடிக்க வேண்டும்.
- Preparation Tip: இப்போதிருந்தே தினமும் ஓட்டப் பயிற்சி செய்யுங்கள். Initially, மெதுவாக ஆரம்பித்து, போகப்போக speed மற்றும் stamina-வை அதிகரியுங்கள்.
Phase 2: Document Verification & Trade Test
- Document Verification: உங்கள் 10th Marksheet, Community Certificate, ITI/NSQF Certificate, Domicile Certificate, Passport size photos போன்ற எல்லா original documents-ஐயும் தயாராக வைத்திருக்க வேண்டும்.
- Trade Test: இது qualifying nature மட்டுமே. நீங்கள் எந்த trade-க்கு விண்ணப்பித்திருக்கிறீர்களோ, அதில் உங்கள் திறமையை சோதிப்பார்கள். இதில் நீங்கள் தேர்ச்சி பெற்றால் போதும், மதிப்பெண்கள் கிடையாது.
Phase 3: Written Examination (100 Marks)
இதுதான் மிக முக்கியமான கட்டம். உங்கள் selection-ஐ தீர்மானிப்பதே இந்த எழுத்துத் தேர்வுதான்.
- Exam Pattern:
- Total Marks: 100
- Total Questions: 100 (Objective type)
- Duration: 2 hours (120 minutes)
- Negative Marking: இல்லை! இது ஒரு பெரிய பிளஸ் பாயிண்ட்.
- Syllabus & Preparation Strategy:
- General Awareness / General Knowledge (25 Marks): History, Geography, Indian Constitution, Sports, Current Affairs (கடைசி 6 மாத நிகழ்வுகள்), Basic Science.
- Knowledge of Elementary Mathematics (25 Marks): Percentages, Profit & Loss, Time & Work, Speed-Distance-Time, Averages, Simple & Compound Interest. 10 ஆம் வகுப்பு கணிதப் புத்தகத்தை நன்கு பயிற்சி செய்யுங்கள்.
- Analytical Aptitude & Reasoning (25 Marks): Coding-Decoding, Number Series, Blood Relations, Seating Arrangement, Analogies, Syllogism. தினமும் ஒரு மணி நேரம் reasoning practice பண்ணுங்க.
- Basic knowledge of English (25 Marks): Comprehension, Error Spotting, Fill in the blanks, Vocabulary, Grammar.
Phase 4: Medical Examination
இறுதிக் கட்டம் இது. CAPF-க்கான மருத்துவ வழிகாட்டுதல்களின்படி உங்கள் உடல் தகுதி முழுமையாகப் பரிசோதிக்கப்படும். கண் பார்வை, கேட்கும் திறன், மற்றும் எந்தவிதமான நோய்களும் இல்லாமல் இருப்பது அவசியம்.
How to Apply Online?
விண்ணப்பங்கள் ஆன்லைன் முறையில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
- முதலில், BSF-ன் official recruitment website ஆன https://rectt.bsf.gov.in க்கு செல்லுங்க.
- Home page-ல் “Recruitment” பிரிவில், “BSF Constable Tradesman Recruitment 2025” link-ஐ click பண்ணுங்க.
- “One Time Registration (OTR)” என்பதை click செய்து, உங்கள் பெயர், மொபைல் எண், email ID போன்ற basic details-ஐ கொடுத்து register பண்ணுங்க.
- Register பண்ண பிறகு, உங்கள் registration ID and password-ஐ யூஸ் பண்ணி login பண்ணுங்க.
- Application form-ல் கேட்கப்பட்ட personal, educational, address போன்ற எல்லா details-ஐயும் correct-ஆ fill பண்ணுங்க.
- தேவையான documents (photo, signature, 10th, ITI, Community certificate) குறிப்பிட்ட size மற்றும் format-ல் scan செய்து upload பண்ணுங்க.
- Application fee-ஐ online மூலம் (Debit card, Credit card, Net banking, UPI) pay பண்ணுங்க.
- Finally, fill பண்ண application form-ஐ ஒரு முறைக்கு இரண்டு முறை சரிபார்த்து, submit பண்ணுங்க. Future reference-க்காக ஒரு copy print அல்லது PDF ஆக save செய்து வச்சுக்கோங்க.
BSF Tradesman Notification:
Application Fee
- General / EWS / OBC: ரூ. 100
- SC / ST / Female Candidates: ரூ. 0
இந்த அருமையான வாய்ப்பை நழுவ விடாதீர்கள். இப்போதே உங்கள் தயாரிப்பைத் தொடங்குங்கள். உங்கள் தேச சேவை கனவு நனவாக வாழ்த்துக்கள்!
ஜெய் ஹிந்த்!
FAQs
மொத்த காலியிடங்கள்?
3588
யார் விண்ணப்பிக்கலாம்?
ஆண்கள் & பெண்கள்
வயது வரம்பு?
18-25 ஆண்டுகள்
கல்வித் தகுதி?
10வது தேர்ச்சி
விண்ணப்ப முறை?
ஆன்லைன் மட்டும்
இது நிரந்தர வேலையா?
நிரந்தரமாக வாய்ப்புள்ளது
சம்பளம் எவ்வளவு?
ரூ.21,700 – 69,100
உடற்தகுதி தேர்வு உண்டா?
ஆம்
OBC பிரிவைச் சார்ந்தவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு என்ன?
28 ஆண்டுகள்
SC/ST பிரிவைச் சார்ந்தவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு என்ன?
30 ஆண்டுகள்

