இந்திய கடற்படை மீண்டும் ஒரு பிரம்மாண்டமான வாய்ப்பை அறிவித்துள்ளது. Group ‘B’ மற்றும் Group ‘C’ பிரிவுகளில் காலியாக உள்ள நூற்றுக்கணக்கான சிவிலியன் பணியிடங்களை நிரப்ப, INCET-01/2025 (Indian Navy Civilian Entrance Test) அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ஆம் வகுப்பு முடித்தவர் முதல் டிகிரி, டிப்ளமோ படித்தவர் வரை தகுதிக்கேற்ப பல பதவிகள் காத்திருக்கின்றன. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, உங்கள் அரசு வேலை கனவை நனவாக்குவது எப்படி என்று விரிவாகப் பார்ப்போம்.
Table of Contents
INCET-01/2025 ன்னா என்ன?
கடற்படை என்றதும் நம் நினைவுக்கு வருவது போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகள், சீருடை அணிந்த வீரர்கள் தான். ஆனால் இவ்வளவு பெரிய ஒரு படையை பின்னணியில் இருந்து இயக்குவதற்கு ஒரு மாபெரும் சிவிலியன் படை தேவை. இன்ஜினியரிங் வேலைகள் செய்யும் சார்ஜ்மேன் முதல், அலுவலகப் பணிகளை கவனிக்கும் MTS வரை, மருத்துவமனையில் சேவை செய்யும் நர்ஸ் முதல், வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் வரை பலதரப்பட்ட சிவிலியன் ஊழியர்கள் கடற்படைக்கு அவசியம்.
இந்த வேலையைத் தேர்ந்தெடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
- வேலை பாதுகாப்பு (Job Security): இது ஒரு மத்திய அரசுப் பணி என்பதால், வேலைக்கு முழுப் பாதுகாப்பு உண்டு.
- நல்ல சம்பளம்: 7வது ஊதியக் குழுவின்படி (7th CPC) கைநிறைய சம்பளம் மற்றும் படிகள் கிடைக்கும்.
- வசதிகள்: மருத்துவ வசதி, பயணச் சலுகைகள், கேன்டீன் வசதி என பல கூடுதல் நன்மைகள் உண்டு.
Vacancy Details
Group ‘B’ பதவிகள்:
| Post Name | Total Vacancies |
| Staff Nurse | 01 |
| Chargeman (Naval Aviation) | 01 |
| Chargeman (Ammunition Workshop) | 08 |
| Chargeman (Mechanic) | 49 |
| Chargeman (Ammunition and Explosive) | 53 |
| Chargeman (Electrical) | 19 |
| Chargeman (Electronics and Gyro) | 05 |
| Chargeman (Weapon Electronics) | 05 |
| Chargeman (Instrument) | 02 |
| Chargeman (Mechanical) | 11 |
| Chargeman (Heat Engine) | 07 |
| Chargeman (Mechanical Systems) | 04 |
| Chargeman (Metal) | 21 |
| Chargeman (Ship Building) | 11 |
| Chargeman (Millwright) | 05 |
| Chargeman (Auxiliary) | 03 |
| Chargeman (REF and AC) | 04 |
| Chargeman (Mechatronics) | 01 |
| Chargeman (Civil Works) | 03 |
| Chargeman (Machine) | 02 |
| Chargeman (Planning, Production and Control) | 13 |
| Assistant Artist Retoucher | 02 |
Group ‘C’ பதவிகள்
| Post Name | Total Vacancies |
| Pharmacist | 06 |
| Cameraman | 01 |
| Store Superintendent (Armament) | 08 |
| Fire Engine Driver | 14 |
| Fireman | 90 |
| Storekeeper/Storekeeper (Armament) | 176 |
| Civilian Motor Driver Ordinary Grade | 117 |
| Tradesman Mate | 207 |
| Pest Control Worker | 53 |
| Bhandari | 01 |
| Lady Health Visitor | 01 |
| Multi Tasking Staff (Ministerial) | 94 |
| Multi Tasking Staff (Non-Industrial)/ Ward Sahaika | 81 |
| Multi Tasking Staff (Non-Industrial)/ Dresser | 02 |
| Multi Tasking Staff (Non-Industrial)/ Dhobi | 04 |
| Multi Tasking Staff (Non-Industrial)/ Mali | 06 |
| Multi Tasking Staff (Non-Industrial)/ Barber | 04 |
| Draughtsman (Construction) | 02 |
மொத்தமாக பல நூறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்க படிப்புக்கும் தகுதிக்கும் ஏற்ற வேலையை நீங்க தேர்ந்தெடுக்கலாம். கீழே உள்ள அட்டவணைகளில் பதவி வாரியான காலியிடங்கள் மற்றும் சம்பள விவரங்களைக் கொடுத்துள்ளேன்.
Job Profile & Eligibility
ஒவ்வொரு பதவிக்கும் வயது வரம்பு (Age Limit) மற்றும் கல்வித் தகுதி (Educational Qualification) தனித்தனியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமான சில பதவிகளுக்கான தகுதிகள் மற்றும் வேலை விவரங்களை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
1. Chargeman (பல்வேறு துறைகள்)
- பொறுப்புகள்: சார்ஜ்மேன் பதவி என்பது ஒரு மினி-மேனேஜர் போன்றது. கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களின் பழுது மற்றும் பராமரிப்புப் பணிகளை குறிப்பிட்ட நேரத்திற்குள், தரத்துடன் முடித்துக் கொடுக்க வேண்டும். உங்கள் குழுவினரின் பாதுகாப்பை உறுதி செய்வதும், வேலைக்குத் தேவையான கருவிகள் சரியாக இருப்பதை கவனிப்பதும் உங்கள் பொறுப்பு.
- வயது: 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் Diploma in Engineering (Mechanical, Electrical, Electronics, Chemical etc.) முடித்திருக்க வேண்டும். அல்லது, Physics, Chemistry, Maths பாடங்களுடன் B.Sc. டிகிரி முடித்திருக்க வேண்டும்.
2. Tradesman Mate
- பொறுப்புகள்: இது ஒரு ஆல்-ரவுண்டர் வேலை. கப்பல்/ நீர்மூழ்கிக் கப்பல்களின் உற்பத்தி மற்றும் பராமரிப்புப் பணிகளில் உதவுவது , அலுவலகத்தில் கோப்புகளை எடுத்துச் செல்வது , நகல் எடுப்பது (Photocopying) , அலுவலக வளாகத்தைத் தூய்மையாகப் பராமரிப்பது , மற்றும் உயர் அதிகாரிகள் வழங்கும் பிற பணிகளைச் செய்வது என பலதரப்பட்ட வேலைகள் இருக்கும்.
- வயது: 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. Civilian Motor Driver (Ordinary Grade)
- பொறுப்புகள்: கனரக மற்றும் இலகுரக ராணுவ வாகனங்களை ஓட்டுவது உங்கள் முக்கிய பணி. வாகனங்களில் எரிபொருள், ஆயில், தண்ணீர் ஆகியவற்றை சரியாகப் பராமரிப்பது , வாகனத்தைச் சுத்தமாக வைத்திருப்பது , மற்றும் சிறிய பழுதுகளைச் சரிசெய்வது போன்ற பொறுப்புகளும் உண்டு.
- வயது: 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. கனரக வாகனங்கள் (HMV) மற்றும் பைக் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். கனரக வாகனம் ஓட்டியதில் ஒரு வருட அனுபவம் தேவை.
4. Fireman
- பொறுப்புகள்: தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதுதான் ஒரு ஃபயர்மேனின் முதன்மைப் பணி. எந்நேரமும் விழிப்புடன் இருந்து, தீ விபத்து அல்லது பிற அவசர காலங்களில் மனித உயிர்களையும், உடைமைகளையும் காப்பாற்ற வேண்டும். தீயணைப்புக் கருவிகளைப் பராமரிப்பதும் உங்கள் பொறுப்பு.
- வயது: 18 முதல் 25 வயது வரை.
- கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி.
- உடல் தகுதி: உயரம் 165 செ.மீ (ST பிரிவினருக்கு 2.5 செ.மீ தளர்வு உண்டு), மார்பளவு 81.5 செ.மீ (விரிந்த நிலையில் 85 செ.மீ), எடை குறைந்தபட்சம் 50 கிலோ இருக்க வேண்டும். மேலும், 63.5 கிலோ எடை கொண்ட ஒருவரை 183 மீட்டர் தூரத்திற்கு 96 வினாடிகளில் தூக்கிச் செல்வது, 2.7 மீட்டர் நீளம் தாண்டுவது, 3 மீட்டர் கயிற்றில் ஏறுவது போன்ற Endurance Test-களும் உண்டு.
Age Relaxation:
அரசு விதிகளின்படி, SC/ST பிரிவினருக்கு 5 வருடங்களும் , OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் , மாற்றுத்திறனாளிகளுக்கு (PwBDs) 10 வருடங்களும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு எப்படி நடக்கும்?
Step 1: Computer Based Examination
- அனைத்து தகுதியான விண்ணப்பதாரர்களும் கணினி வழித் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். இந்தத் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளிலும் இருக்கும்.
- தேர்வில் மொத்தம் 100 கேள்விகள், 90 நிமிடங்கள் வழங்கப்படும்.
| பகுதி | பாடம் | கேள்விகள் |
|---|---|---|
| A | General Intelligence | 25 |
| B | General Awareness | 25 |
| C | Quantitative Aptitude | 25 |
| D | English Language | 25 |
| Total | 100 |
- பாடத்திட்டம் (Syllabus):
- General Intelligence: உங்கள் பகுத்தறியும் திறனைச் சோதிக்கும் கேள்விகள். இதில் analogies, coding-decoding, number series, problem solving போன்றவை அடங்கும். இது உங்கள் மூளைக்கு வேலை கொடுக்கும் பகுதி.
- General Awareness: நடப்பு நிகழ்வுகள், இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகள், வரலாறு, கலாச்சாரம், பொருளாதாரம், அறிவியல் தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். தினமும் செய்தித்தாள் வாசிப்பது மிகவும் உதவும்.
- Quantitative Aptitude: இது முழுக்க முழுக்க கணிதம். பத்தாம் வகுப்பு தரத்தில் percentages, ratio, time and work, profit and loss, basic algebra, geometry போன்ற தலைப்புகளில் இருந்து கேள்விகள் வரும்.
- English Language: ஆங்கில இலக்கணம், vocabulary, synonyms, antonyms, மற்றும் comprehension passage போன்றவை சோதிக்கப்படும்.
Step 2: Document Verification & Skill Test
தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள்.
- Fireman, Driver, Tradesman Mate போன்ற பதவிகளுக்கு உடல் தகுதித் தேர்வு அல்லது திறன் தேர்வு நடத்தப்படும். இது தகுதி பெறுவதற்காக மட்டுமே; இதன் மதிப்பெண்கள் இறுதிப் பட்டியலில் சேராது.
How to Apply
விண்ணப்ப செயல்முறை முழுக்க முழுக்க ஆன்லைன் தான்.
- விண்ணப்பக் கட்டணம்: ₹295. SC/ST, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.
- விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் விண்ணபிக்கலாம்.
முக்கிய தேதிகள்:
- ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 05 ஜூலை 2025
- ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 18 ஜூலை 2025
விண்ணப்பிக்கும் முன் தயாராக வைத்திருக்க வேண்டியவை: ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது சில ஆவணங்களை ஸ்கேன் செய்து அப்லோட் செய்ய வேண்டும்.
| Passport Photograph | 20 KB and 50 KB |
| Signature | 10 KB and 20 KB |
| OBC/SC/ST/EWS Certificate | 50 KB and 200 KB |
| OBC Declaration | Download |
| 10th Certificate | 50 KB and 200 KB |
| Education Certificates | 50 KB and 200 KB |
| Ex-Servicemen Certificate | (If Required) |
| Disability Certificate for PwBDs | (If Required) |
கவனத்தில் கொள்ள வேண்டியவை
- கடைசி நாள் வரை காத்திருக்க வேண்டாம். சர்வர் பிரச்சினைகள் வரலாம். அதனால், முன்கூட்டியே விண்ணப்பித்து விடுவது நல்லது.
- விண்ணப்பப் படிவத்தை நிரப்பும்போது, சரியான மற்றும் பயன்பாட்டில் உள்ள e-mail ID மற்றும் மொபைல் எண்ணைக் கொடுங்கள்.
- தேர்வு மையத்திற்கு அட்மிட் கார்டு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு அசல் அடையாள அட்டையை (Aadhar, PAN Card, Driving License) கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும்.
- தேர்வு எழுத மூன்று நகரங்களை நீங்கள் தேர்வு செய்யலாம். இருப்பினும், நிர்வாகக் காரணங்களுக்காக கடற்படை வேறு நகரத்தை ஒதுக்க வாய்ப்புள்ளது.
INCET-01/2025 Notification PDF
சரியான திட்டமிடலுடன், பாடத்திட்டத்தை நன்கு படித்து தயாரானால், இந்தத் தேர்வில் நீங்கள் நிச்சயம் வெற்றி பெறலாம்.
All the very best!
FAQs
1. INCET-01/2025 விண்ணப்பிக்க கடைசி நாள் என்ன?
18 ஜூலை 2025 ஆகும்.
2. INCET-01/2025 விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?
₹295
3. பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் உண்டா?
கட்டணம் கிடையாது.
4. INCET-01/2025 எங்கே விண்ணப்பிக்க வேண்டும்?
www.joinindiannavy.gov.in
5. INCET-01/2025 தேர்வு எந்தெந்த மொழிகளில் நடத்தப்படும்?
ஆங்கிலம் மற்றும் இந்தி
6. OBC பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டா?
3 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு


I want become a Indian navy