வணக்கம்! இந்திய விமானப்படையில (Indian Air Force) சேரணும்னு ஆசையா?
உங்களுக்காகவே இந்திய விமானப்படை, குரூப் ‘சி’ சிவிலியன் பதவிகளுக்கான ஒரு அருமையான வேலைவாய்ப்பு அறிவிப்பை (Advertisement No. 01/2025) வெளியிட்டு இருக்கு.
இந்த வேலைக்கு எப்படி விண்ணப்பிக்கிறது, என்னென்ன தகுதிகள் வேணும், சம்பளம் எவ்வளவு, தேர்வு முறை எப்படி இருக்கும்னு முழு விவரங்களையும் தெரிஞ்சுக்கலாம்!
Table of Contents
IAF Group C Recruitment 01/2025
| விவரம் | தகவல் |
|---|---|
| அமைப்பு | இந்திய விமானப்படை (Indian Air Force – IAF) |
| பதவிகள் | குரூப் ‘சி’ சிவிலியன் (LDC, MTS, Cook, Store Keeper, etc.) |
| காலியிடங்கள் | 153 |
| விளம்பர எண் | 01/2025 |
| பணியிடங்கள் | பனாகர், தேஸ்பூர், அம்பாலா, டெல்லி |
| விண்ணப்ப முறை | ஆஃப்லைன் (தபால் மூலம்) |
| விண்ணப்பத் தொடக்கம் | மே 17, 2025 |
| கடைசி தேதி | ஜூன் 15, 2025 |
| தேர்வு முறை | எழுத்துத் தேர்வு, திறன்/செய்முறைத் தேர்வு |
பதவிகள் மற்றும் காலியிடங்கள்
| விமானப்படை நிலையம் / முகவரி | பதவி | மொத்த காலியிடங்கள் |
|---|---|---|
| பனாகர், மேற்கு வங்கம் | Lower Division Clerk (LDC) | 10 |
| Hindi Typist | 01 | |
| Cook (OG) | 12 | |
| Store Keeper | 16 | |
| Carpenter (SK) | 03 | |
| Painter (SK) | 03 | |
| Multi-Tasking Staff (MTS) | 53 | |
| Mess Staff | 07 | |
| Laundryman | 03 | |
| House Keeping Staff (HKS) | 31 | |
| Vulcaniser | 01 | |
| Civilian Mechanical Transport Driver (OG) | 08 | |
| தேஸ்பூர், அசாம் | Lower Division Clerk (LDC) | 01 |
| அம்பாலா, ஹரியானா | Hindi Typist | 01 |
| AFCAO, டெல்லி | Lower Division Clerk (LDC) | 03 |
| மொத்தம் | 153 | |
சம்பள விவரங்கள்
தேர்ந்தெடுக்கப்படுறவங்களுக்கு 7வது ஊதியக் குழுவின் (7th CPC) படி நல்ல சம்பளம் கிடைக்கும். பதவிகளைப் பொறுத்து சம்பள லெவல் மாறுபடும்:
- லெவல்-2 (Level-2): LDC, Hindi Typist, Store Keeper, CMTD (OG), Cook (OG), Painter (SK), Carpenter (SK)
- லெவல்-1 (Level-1): HKS, Laundryman, Mess Staff, MTS, Vulcaniser
முக்கிய தேதிகள்
- அறிவிப்பு வெளியான நாள்: Employment News ல மே 17-23, 2025 வெளியாகி இருக்கு.
- விண்ணப்பிக்க கடைசி தேதி: அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 30 நாட்கள் வரைக்கும் நீங்க விண்ணப்பிக்கலாம்.
- ஜூன் 15, 2025 கடைசி தேதி. ஆனா, நீங்க முடிஞ்சவரைக்கும் சீக்கிரமா அப்ளை பண்ணிடுறது நல்லது.
விண்ணப்பக் கட்டணம் (Application Fees)
இந்த வேலைக்கு அப்ளை பண்ண எந்த விண்ணப்பக் கட்டணமும் கிடையாது.
தகுதி வரம்புகள்
யாரெல்லாம் Air Force Group C Recruitment 01/2025 விண்ணப்பிக்கலாம்? அதுக்கு என்ன தகுதி வேணும்னு இப்ப பார்க்கலாம்.
கல்வித் தகுதி (Educational Qualification):
| பதவி | கல்வித் தகுதி மற்றும் அனுபவம் |
|---|---|
| LDC / Hindi Typist | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி. கம்ப்யூட்டர்ல இங்கிலீஷ்ல 35 wpm அல்லது ஹிந்தில 30 wpm டைப்பிங் வேகம். |
| Store Keeper | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி. ஸ்டோர்ஸ்ல வேலை பார்த்த அனுபவம் விரும்பத்தக்கது. |
| CMTD (OG) | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி. லைட் & ஹெவி வெஹிக்கிள் ஓட்டுநர் உரிமம். ஓட்டுவதில் திறமை & மோட்டார் மெக்கானிசம் அறிவு. 2 வருட அனுபவம். |
| Cook (OG) | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி + கேட்டரிங்ல சர்டிபிகேட்/டிப்ளமோ + 1 வருட அனுபவம். |
| Painter / Carpenter (SK) | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி. சம்பந்தப்பட்ட டிரேடுல ITI சர்டிபிகேட் அல்லது முன்னாள் ராணுவத்தினர். |
| HKS / Laundryman / Mess Staff / MTS | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி. சில பதவிகளுக்கு 1 வருட அனுபவம் விரும்பத்தக்கது. |
| Vulcaniser | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது முன்னாள் ராணுவத்தினர். |
வயது வரம்பு (Age Limit):
- எல்லா பதவிகளுக்கும் பொதுவான வயது வரம்பு 18 முதல் 25 வயது வரை.
- வயது வரம்பை கணக்கிடும் நாள், விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதியாகும்.
- வயது தளர்வுகள்:
- OBC பிரிவினருக்கு – 3 ஆண்டுகள்.
- SC/ST பிரிவினருக்கு – 5 ஆண்டுகள்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு (PwBD) – 10 ஆண்டுகள் (PwBDல SC/STனா 15 வருஷம், OBCனா 13 வருஷம்).
- முன்னாள் ராணுவத்தினருக்கு – அவங்க சர்வீஸ் காலத்தை கழிச்ச பிறகு 3 வருஷம் வரைக்கும் தளர்வு உண்டு.
- துறைசார் ஊழியர்களுக்கு 40 (UR) / 45 (SC/ST) வயது வரை தளர்வு உண்டு.
Selection Process
- விண்ணப்பப் பரிசீலனை (Scrutiny): முதல்ல நீங்க அனுப்புற அப்ளிகேஷன்ல வயது, தகுதி, டாக்குமெண்ட்ஸ் எல்லாம் சரியா இருக்கானு செக் பண்ணுவாங்க.
- எழுத்துத் தேர்வு (Written Test): சரியா இருக்கறவங்களுக்கு மட்டும் எழுத்துத் தேர்வுக்கான கால் லெட்டர் அனுப்புவாங்க. இது உங்க கல்வித் தகுதியோட அடிப்படையில இருக்கும். கேள்வித்தாள் இங்கிலீஷ்லயும், ஹிந்திலயும் இருக்கும்.
- திறன் / செய்முறை / உடல் தகுதித் தேர்வு (Skill / Practical / Physical Test): எழுத்துத் தேர்வுல நல்ல மார்க் எடுத்தவங்கள கூப்பிட்டு, அவங்க பதவிக்கு ஏத்த மாதிரி ஸ்கில் டெஸ்ட் (டைப்பிங், டிரைவிங் மாதிரி) வைப்பாங்க. இதுல பாஸ் பண்ணா போதும், மார்க் எதுவும் கிடையாது (Qualifying only).
பாடத்திட்டம் (Syllabus):
LDC / Hindi Typist – எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்
| பாடங்கள் (Subjects) |
|---|
| General Intelligence |
| English Language |
| Numerical Aptitude |
| General Awareness |
MTS, HKS, Laundryman, Mess Staff & Vulcaniser – எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்
| பாடங்கள் (Subjects) |
|---|
| General Intelligence & Reasoning |
| Numerical Aptitude |
| General English |
| General Awareness |
மற்ற பதவிகள் (Cook, Store Keeper, CMTD, Carpenter, Painter etc.)
| பாடங்கள் (Subjects) |
|---|
| General Intelligence & Reasoning |
| Numerical Aptitude |
| General English |
| General Awareness |
| Trade/Post related question |
How to Apply
இதுக்கு நீங்க ஆன்லைன்ல அப்ளை பண்ண முடியாது. தபால் மூலமா (Offline) தான் விண்ணப்பிக்கணும். எப்படினு ஸ்டெப்-பை-ஸ்டெப்பா பார்க்கலாம்:
- விண்ணப்பப் படிவம்: கடைசியில கொடுத்திருக்கற APPLICATION FORM ஐ Download பண்ணிக்கோங்க.
- பூர்த்தி செய்தல்: உங்க பெயர், அப்பா பெயர், பிறந்த தேதி, முகவரி, கல்வித் தகுதி, ஜாதி எல்லாத்தையும் சரியா, பிழை இல்லாம டைப் பண்ணுங்க.
- புகைப்படம்: உங்க லேட்டஸ்ட் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை ஒட்டி, அதுல சுய சான்றொப்பம் (Self-attested) பண்ணுங்க.
- ஆவணங்கள்: உங்க கல்விச் சான்றிதழ், வயதுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் , அனுபவச் சான்றிதழ், மாற்றுத்திறனாளி சான்றிதழ், EWS சர்டிபிகேட், முன்னாள் ராணுவத்தினர்னா டிஸ்சார்ஜ் புக் – இது எல்லாத்தோட ஜெராக்ஸ் காப்பிலயும் உங்க கையெழுத்தப் போட்டு (Self-attested) அப்ளிகேஷனோட இணைக்கணும்.
- சுய முகவரியிட்ட உறை: ரூ.10 ஸ்டாம்ப் ஒட்டுன, உங்க முகவரி எழுதின ஒரு சின்ன கவரை (Self-addressed envelope) இது கூடவே வைக்கணும். முகவரியை இங்கிலீஷ் அல்லது ஹிந்தில எழுதணும்.
- பெரிய உறை: எல்லாத்தையும் ஒரு பெரிய கவர்க்குள்ள போட்டு, அந்த கவர் மேல “APPLICATION FOR THE POST OF ______ AND CATEGORY ______” னு நீங்க விண்ணப்பிக்கிற பதவியையும், உங்க கேட்டகிரியையும் பெரிய எழுத்துல, தெளிவா எழுதணும்.
- அனுப்பும் முகவரி: நீங்க எந்த விமானப்படை நிலையத்துக்கு விண்ணப்பிக்க விரும்புறீங்களோ, அந்த நிலையத்தோட முகவரிக்கு (நோட்டிபிகேஷன்ல கொடுத்திருக்கற பனாகர், தேஸ்பூர், அம்பாலா, டெல்லி முகவரிகள்) அனுப்பணும். நீங்க எந்த முகவரிக்கு அனுப்பணும்னு நோட்டிபிகேஷன்ல செக் பண்ணிக்கோங்க.
- கடைசி தேதி: ஜூன் 15, 2025 (தோராயமாக) அல்லது அதுக்கு முன்னாடி உங்க அப்ளிகேஷன் அவங்களுக்கு கிடைக்கிற மாதிரி அனுப்புங்க. தபால் தாமதத்துக்கு IAF பொறுப்பாகாது.
Official Notification : மே 17-23, 2025 தேதியிட்ட ‘Employment News’ பத்திரிக்கையைப் பார்க்கவும்.
Official IAF Website: https://indianairforce.nic.in/
10வது, 12வது படிச்ச நம்ம தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பு.
தகுதியுள்ள யாரும் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க.
உங்க எல்லாருக்கும் எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! ஏதாவது சந்தேகம் இருந்தா, கமெண்ட்ல கேளுங்க.
FAQ
Air Force Group C Recruitment 01/2025 வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?
ஜூன் 15, 2025
இந்த ஆட்சேர்ப்பில் மொத்தம் எத்தனை காலியிடங்கள் உள்ளன?
153 சிவிலியன் குரூப் ‘சி’ காலியிடங்கள் உள்ளன.
இந்த வேலைக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி என்ன?
பல பதவிகளுக்கு (MTS, HKS போன்றவை) குறைந்தபட்ச கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி ஆகும்.
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைனா அல்லது ஆஃப்லைனா?
நீங்கள் தபால் மூலம் ஆஃப்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டுமா?
விண்ணப்பக் கட்டணம் இல்லை, ஆனால் ரூ.10 தபால் தலை ஒட்டிய சுய முகவரியிட்ட உறை அனுப்ப வேண்டும்

