TNUSRB SI Notification 2025

TNUSRB SI Notification 2025: உங்களுக்கான முழுமையான கையேடு

வணக்கம் நண்பர்களே! தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) 2025-ஆம் ஆண்டுக்கான காவல் உதவி ஆய்வாளர் (Sub-Inspector of Police – SI) பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்காங்க. இந்த அறிவிப்பு தமிழ்நாடு முழுவதும் இருக்கிற தகுதி வாய்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகள் எல்லாருக்கும் ஒரு சூப்பரான வாய்ப்பு!

இந்த கட்டுரைல முழுக்க முழுக்க TNUSRB SI Notification 2025 பத்திதான் பார்க்கப் போறோம். இந்த தேர்வு யாருக்கெல்லாம் பொருந்தும், எப்படி விண்ணப்பிக்கிறது, என்னென்ன தகுதிகள் வேணும், தேர்வு முறை எப்படி இருக்கும்னு எல்லா தகவல்களையும் தெள்ளத் தெளிவா பார்க்கப் போறோம்.

ஒரு காவல் உதவி ஆய்வாளரா வேலை பார்க்குறது ஒரு பெரிய பொறுப்பு மட்டும் இல்ல, நிறைய வாய்ப்புகளையும் கொண்டது.அதனால, இந்த TNUSRB SI Notification 2025 உங்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைச்சுத் தரக்கூடிய ஒரு பொன்னான வாய்ப்புன்னு சொல்லலாம்! வாங்க, இந்த அறிவிப்புல என்னென்ன முக்கியமான விஷயங்கள் இருக்குன்னு ஒன்னு ஒன்னா பார்ப்போம்!

TNUSRB SI Notification 2025 – Details

TNUSRB SI Notification 01/2025 ல என்னென்ன தகவல்கள் இருக்குன்னு தெளிவா பாத்துருவோம். நீங்க அப்ளை பண்ணுறதுக்கு முன்னாடி இதெல்லாம் கண்டிப்பா தெரிஞ்சிருக்கணும்!

முக்கிய தேதிகள் (Important Dates):

  • விண்ணப்பம் தொடங்கும் தேதி (Commencement of Online Application): நீங்க ஆன்லைன்ல அப்ளை பண்ண ஆரம்பிக்க வேண்டிய தேதி 07.04.2025. இந்த தேதியில இருந்து TNUSRB வெப்சைட் ஓபன்ல இருக்கும்.
  • விண்ணப்பம் கடைசி தேதி (Last date of submission of Online Application): ஆன்லைன்ல அப்ளை பண்ணி முடிக்கிறதுக்கு 03.05.2025 தான் கடைசி நாள். அதுக்குள்ள உங்க அப்ளிகேஷன கண்டிப்பா சப்மிட் பண்ணிடுங்க. கடைசி நேரத்துல Rush பண்ணாதீங்க!
  • விண்ணப்பத்துல திருத்தம் செய்ய கடைசி தேதி (Last date for correction of submitted Online Application): சில பேர் அப்ளை பண்ணும்போது ஏதாவது மிஸ்டேக் பண்ணிருக்கலாம். அந்த மாதிரி இருக்கிறவங்களுக்காக கரெக்ஷன் பண்றதுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்குறாங்க. அதுக்கான கடைசி தேதி 13.05.2025. ஆனா, முடிஞ்ச வரைக்கும் முதல் தடவையே சரியா அப்ளை பண்ண பாருங்க.
  • எழுத்துத் தேர்வு தேதிகள் (Dates of Written Examination): Open Candidates-க்கும் Departmental Candidates-க்கும் எப்ப எக்ஸாம் நடக்கும்னு இன்னும் சொல்லல. ஆனா, கூடிய சீக்கிரமே அதை வெப்சைட்ல Announce பண்ணுவாங்கன்னு சொல்லிருக்காங்க.அதனால, நீங்க TNUSRB வெப்சைட்ட ரெகுலரா செக் பண்ணிட்டே இருங்க!

Official Website of the TNUSRB:

இந்த வேலை பத்தின எல்லா அதிகாரபூர்வ தகவல்களும் உங்களுக்கு எங்க கிடைக்கும்னு தெரிஞ்சுக்கணுமா? அதுதான் www.tnusrb.tn.gov.in. இந்த வெப்சைட்டுக்கு போய் நீங்க Notification-ஐ டவுன்லோட் பண்ணிக்கலாம், ஆன்லைன்ல அப்ளை பண்ணலாம், ஹால் டிக்கெட் வந்தா டவுன்லோட் பண்ணிக்கலாம்.அதனால, இந்த வெப்சைட் அட்ரஸ மறக்காம நோட் பண்ணி வச்சுக்கோங்க. இதுதான் உங்களுக்கான நம்பர் ஒன் சோர்ஸ்!

காலி பணியிடங்கள் (Vacancies)

இந்த TNUSRB SI Notification 2025ல நிறைய காலி பணியிடங்கள் அறிவிச்சிருக்காங்க. மொத்தம் 1299 ரெகுலர் வேகன்சீஸ் (Regular Vacancies) இருக்கு. அது மட்டும் இல்லாம, முன்னாடி நிரப்பப்படாம இருந்த 53 ஷார்ட்ஃபால் வேகன்சீஸ் (Shortfall Vacancies) வேற இருக்கு! ஆக மொத்தம் நிறைய பேருக்கு இந்த முறை வேலை கிடைக்க சான்ஸ் இருக்குன்னு சொல்லலாம்.

ரெண்டு முக்கியமான டிபார்ட்மெண்ட்ல (Department) எடுக்குறாங்க. ஒன்னு Taluk போலீஸ், இன்னொன்னு Armed Reserve (AR) போலீஸ்.

அடுத்ததா இந்த ஷார்ட்ஃபால் வேகன்சீஸ் பத்தி கொஞ்சம் டீடைலா பாப்போம். இந்த 53 காலி இடங்களும் முன்னாடி சில காரணங்களால நிரப்பப்படாம இருந்த இடங்கள்.

ஒருவேளை பெண்கள்ளுக்கான ஒதுக்கப்பட்ட காலி இடங்கள்ல யாரும் செலக்ட் ஆகலைன்னா, அந்த இடங்களை தகுதியான ஆண்களை வச்சு நிரப்பிடுவாங்க.

மொத்தத்துல இந்த TNUSRB SI Notification 2025ல நிறைய காலி இடங்கள் இருக்கு. உங்களுடைய தகுதிக்கும் விருப்பத்துக்கும் ஏத்த மாதிரி Taluk இல்லன்னா Armed Reserve பிரிவுக்கு நீங்க அப்ளை பண்ணலாம்.

சம்பளம் & கல்வி தகுதி

சம்பள விகிதம் (Salary Details):

இந்த SI வேலை கெத்தா இருக்குற மாதிரி சம்பளமும் கெத்தா தான் இருக்கும்.

Rs. 36,900 – 1,16,600/-

கல்வித் தகுதி – (Educational Qualification )

பட்டப்படிப்பு கட்டாயம் (Bachelor’s Degree is a must): நீங்க கண்டிப்பா ஒரு Bachelor’s Degree முடிச்சிருக்கணும். அதுவும் UGC (University Grants Commission) அல்லது நம்ம கவர்மெண்ட்டால அங்கீகரிக்கப்பட்ட ஒரு யுனிவர்சிட்டில படிச்சிருக்கணும்.

படிப்பு முறை (Pattern of Study):

  • நீங்க டிகிரி படிச்சிருக்கறது ஒரு குறிப்பிட்ட Pattern-ல இருக்கணும்னு சொல்றாங்க. அது என்னன்னா, நீங்க ஸ்கூல்ல 10th முடிச்சு, அப்புறம் +2 (HSC) முடிச்சு, அதுக்கப்புறம் 3 வருஷம் டிகிரி படிச்சிருக்கலாம் (10+2+3).
  • இல்லன்னா சில பேர் 4 வருஷம் இல்லன்னா 5 வருஷம் டிகிரி படிச்சிருப்பாங்க, அதுவும் ஓகே தான்.
  • இன்னும் சில கோர்ஸ் 10th முடிச்சு 3 வருஷம் டிப்ளமோ படிச்சுட்டு அப்புறம் 2 வருஷம் டிகிரி படிச்சிருப்பாங்க (10+3+2).
  • இல்லன்னா 10th முடிச்சு 3 வருஷம் டிப்ளமோ படிச்சுட்டு அப்புறம் 3 வருஷம் டிகிரி படிச்சிருந்தாலும் (10+3+3) நீங்க அப்ளை பண்ணலாம்.

திறந்த பல்கலைக்கழகம் மற்றும் தொலைதூரக் கல்வி (Open University and Distance Education): நீங்க Open University-லயோ இல்ல Distance Education மூலமாவோ டிகிரி வாங்கியிருந்தா அதுவும் செல்லும். ஆனா, சில பேர் டைரக்டா Open University-ல மட்டும் டிகிரி வாங்கியிருப்பாங்க, மேல சொன்ன மாதிரி ஸ்கூல் படிப்பு இல்லாம டைரக்டா டிகிரி வாங்கிருந்தா நீங்க இந்த வேலைக்கு Eligible ஆக மாட்டீங்க.

9th, 11th படிக்காம டைரக்டா 10th, 12th? : நிறைய பேர் 9th இல்லன்னா 11th படிக்காம டைரக்டா 10th இல்லன்னா 12th எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணிருப்பாங்க. அப்படி நீங்க படிச்சிருந்தா, நீங்க இந்த TNUSRB SI வேலைக்கு தகுதி இல்லை (Not Eligible)

வயது வரம்பு (Age Limit):

வயசு வரம்பு (Age Limit) பத்தியும், யாருக்கெல்லாம் அதுல தளர்வு (Relaxation) இருக்குன்னு தெளிவா பாக்கலாம் வாங்க!

பொதுவா, இந்த வேலைக்கு அப்ளை பண்றவங்க 01.07.2025 தேதியின்படி 20 வயசு பூர்த்தியாகி இருக்கணும். அதே மாதிரி, அதிகபட்சமா 30 வயசுக்கு உள்ள இருக்கணும். இதுதான் பெரும்பாலானவங்களுக்கு இருக்கற பொதுவான வயசு வரம்பு.

ஒவ்வொரு பிரிவினருக்கும் வயது வரம்பில் அளிக்கப்படும் தளர்வுகள் (Age Relaxation for Different Categories):

சில குறிப்பிட்ட பிரிவினருக்கு இந்த அதிகபட்ச வயசுல கொஞ்சம் சலுகை கொடுக்குறாங்க.

  • BC (Backward Class), BC(M) (Backward Class – Muslim), MBC/DNC (Most Backward Class / Denotified Communities): இந்த பிரிவுகளை சேர்ந்தவங்களுக்கு அதிகபட்ச வயசுல 2 வருஷம் தளர்வு உண்டு. அதாவது, இவங்க 32 வயசு வரைக்கும் அப்ளை பண்ணலாம்.
  • SC (Scheduled Caste), SC(A) (Scheduled Caste – Arunthathiyar), ST (Scheduled Tribe): இந்த பிரிவுகளை சேர்ந்தவங்களுக்கு அதிகபட்ச வயசுல 5 வருஷம் தளர்வு உண்டு. ஆக, இவங்க 35 வயசு வரைக்கும் இந்த வேலைக்கு முயற்சி பண்ணலாம்.
  • Transgender: திருநங்கைகளுக்கும் அதிகபட்ச வயசுல 5 வருஷம் தளர்வு உண்டு.
  • Destitute Widow (விதவை): ஆதரவற்ற விதவைகளுக்கும் அதிகபட்ச வயசுல 5 வருஷம் தளர்வு இருக்கு.
  • Ex-servicemen (முன்னாள் இராணுவத்தினர்): முன்னாள் இராணுவத்தினருக்கு அவங்க ராணுவத்துல வேலை செஞ்ச கால அளவை கழிச்சுட்டு, அதுக்கப்புறம் 3 வருஷம் வரைக்கும் அதிகபட்ச வயசுல தளர்வு கொடுக்குறாங்க.
  • Departmental Quota விண்ணப்பதாரர்கள்: தமிழ்நாடு போலீஸ் டிபார்ட்மெண்ட்ல ஏற்கனவே வேலை செய்றவங்க (Departmental Candidates) இந்த SI பதவிக்கு அப்ளை பண்ணும்போது அவங்களுக்கும் சில வயசு தளர்வுகள் இருக்கு.

Ex-servicemen மற்றும் CAPF பிரிவினர் குறித்த விளக்கம் (Explanation Regarding Ex-servicemen and CAPF Personnel):

முன்னாள் இராணுவத்தினர் (Ex-servicemen) மற்றும் Central Armed Police Forces (CAPF) -ல இருந்து வந்தவங்களுக்கான வயசு தளர்வு விதிமுறைகள் கொஞ்சம் வித்தியாசப்படலாம். அவங்க ராணுவத்துல செஞ்ச சர்வீஸ் பீரியட், அவங்களுடைய டிஸ்சார்ஜ் (Discharge) தேதி இதையெல்லாம் பொறுத்து வயசு வரம்புல தளர்வு கிடைக்கும். இது சம்பந்தமான முழுமையான விவரங்கள் Notification-ல Annexure -ல கொடுத்திருப்பாங்க. அதையும் நீங்க கண்டிப்பா செக் பண்ணிடுங்க.

இடஒதுக்கீடு (Communal Reservation):

200 பாயிண்ட் ரோஸ்டர்?

இந்த இடஒதுக்கீட்டை சரியா ஃபாலோ பண்ணத்தான் இந்த 200 Point Roster முறையை யூஸ் பண்றாங்க. அதாவது, 200 காலி இடங்கள் இருந்தா, எந்தெந்த இடங்கள் எந்தெந்த பிரிவினருக்குப் போகணும்னு ஒரு லிஸ்ட் போட்டு வெச்சிருப்பாங்க. இதனால, எல்லா பிரிவினருக்கும் அந்தந்த பங்கு கரெக்டா போய்ச் சேரும். இது ஒரு சுழற்சி முறை மாதிரி.

சமுதாய சான்றிதழ் முக்கியம்!

நீங்க எந்த இடஒதுக்கீட்டுப் பிரிவுல வர்றீங்களோ, அதுக்கான Community Certificate அதாவது சமுதாய சான்றிதழ் கண்டிப்பா வெச்சிருக்கணும். அப்போதான் நீங்க அந்த ஒதுக்கீட்டின் கீழ விண்ணப்பிக்க முடியும். இந்த சான்றிதழ் ஒரிஜினலா இருக்கணும், சரியான அதிகாரிகிட்ட இருந்து வாங்கியிருக்கணும். அப்புறம், அப்ளை பண்ணும்போது இது சம்பந்தப்பட்ட தகவல்கள் சரியா கொடுக்கணும்.

Details of Quotas:

மொத்த காலி இடங்கள்ல ஒவ்வொரு Quota-வுக்கும் எத்தன எத்தன இடங்கள் இருக்குன்னு பாப்போம்:

ஒதுக்கீடுகளுக்கான சதவீத விவரங்கள் (Percentage Details for Quotas):

சதவீதம்னு பாத்தா, ஒவ்வொரு Quota-வுக்கும் எத்தன சதவீதம் இடங்கள் ஒதுக்கியிருக்காங்கன்னு தெளிவா சொல்லிருக்காங்க:

  • Departmental Quota: மொத்த காலி இடங்கள்ல 20% Department-ல இருக்கறவங்களுக்கு.
  • Wards cum Dependent Quota: மொத்த காலி இடங்கள்ல 10% போலீஸ் வாரிசுகளுக்கு.
  • Sports Quota: மொத்த காலி இடங்கள்ல 7% விளையாட்டு வீரர்களுக்கு.
  • Meritorious Sports Persons Quota: மொத்த காலி இடங்கள்ல 3% ரொம்ப சிறப்பான விளையாட்டு வீரர்களுக்கு.

ஒவ்வொரு Quota-வுக்கும் என்ன விளக்கம்னு சுருக்கமா பாத்துருவோம்:

  • Departmental Quota: நீங்க ஏற்கனவே தமிழ்நாடு போலீஸ் டிபார்ட்மெண்ட்ல Constable, Head Constable இல்லன்னா வேற ஏதாவது பதவியில இருந்தீங்கன்னா, இந்த Quota-வுல நீங்க SI பதவிக்கு போட்டி போடலாம்.
  • Wards cum Dependent Quota: உங்க அப்பா, அம்மா இல்லன்னா கணவன்/மனைவி தமிழ்நாடு போலீஸ் டிபார்ட்மெண்ட்ல வேலை செஞ்சிருந்தாலோ இல்லன்னா இறந்து போயிருந்தாலோ, நீங்க இந்த Quota-வுல விண்ணப்பிக்கலாம். இது அவங்க செஞ்ச சேவைக்காக உங்களுக்கு கிடைக்கிற ஒரு அங்கீகாரம்.
  • Sports Quota: நீங்க ஒரு நல்ல விளையாட்டு வீரரா இருந்து, மாநில அளவுலயோ, தேசிய அளவுலயோ இல்லன்னா சர்வதேச அளவுலயோ விளையாடி பதக்கம் ஜெயிச்சிருந்தீங்கன்னா, இந்த Quota உங்களுக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்.
  • Meritorious Sports Persons Quota: இது Sports Quota மாதிரித்தான். ஆனா, இதுல ரொம்பவும் சிறப்பா விளையாடி பெரிய பெரிய சாதனைகள் பண்ணினவங்களுக்கு முன்னுரிமை கொடுப்பாங்க.

Wards cum Dependent Quota – விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்

சரி, யார் யாரெல்லாம் இந்த ஒதுக்கீட்டுல விண்ணப்பிக்கலாம்? யாரெல்லாம் முடியாது?

நீங்க தகுதியானவரான்னு பாக்கலாம்:

  • நீங்க யாரோட வாரிசா இருக்கணும்ன்னா, அவங்க Government Servant ஆகி இருந்து, Police டிபார்ட்மெண்ட்ல Regular ஊழியரா இருந்திருக்கணும்.
  • அவங்க இப்ப வேலை செஞ்சிட்டு இருந்தாலும் சரி, இல்ல ரிட்டையர் ஆகி இருந்தாலும் சரி, இல்ல இறந்து போயிருந்தாலும் சரி. ஆனா அவங்க Police Department ஊழியரா இருந்திருக்கணும்.
  • அவங்க உங்களோட Father (அப்பா), Mother (அம்மா), Husband (கணவர்), Wife (மனைவி), இல்லன்னா Legally Adopted Son (சட்டப்பூர்வமா தத்து எடுத்த மகன்) / Daughter (மகள்) ஆக இருக்கணும்.

இவங்கெல்லாம் இந்த ஒதுக்கீட்டுல விண்ணப்பிக்க முடியாது:

  • உங்களோட தாத்தா, பாட்டி, மாமா, அத்தைன்னு வேற சொந்தக்காரங்க Police-ல வேலை செஞ்சிருந்தா நீங்க இந்த ஒதுக்கீட்டுல வர முடியாது.
  • Temporary (தற்காலிக) இல்லன்னா Contract Basis-ல வேலை செஞ்சவங்களோட வாரிசுகளும் இதுல வர முடியாது.
  • நீங்க ஆல்ரெடி Government வேலையில இருந்தீங்கன்னா, இந்த ஒதுக்கீட்டுல விண்ணப்பிக்க முடியாது.

Certificate எப்படி வாங்குறது?

இந்த ஒதுக்கீட்டுல நீங்க விண்ணப்பிக்கணும்னா, நீங்க ஒரு Dependency Certificate வாங்கணும். அவங்க வேலை செஞ்ச Police டிபார்ட்மெண்ட்ல இருக்கற Head of the Department (HoD) இல்லன்னா அவங்க நியமிக்கிற அதிகாரி கிட்ட இருந்து வாங்கணும். அந்த Certificate-ல நீங்க அவங்களோட வாரிசுன்னு தெளிவா சொல்லியிருக்கணும்.

Sports Quota – விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்

  • வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதி எல்லாம் பொதுவான அறிவிப்புல சொன்னது மாதிரியே இருக்கணும். அதுல எந்த மாற்றமும் இல்ல.
  • முக்கியமா, நீங்க அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் போட்டிகள்ல கலந்துக்கிட்டு மெடல் வின் பண்ணிருக்கணும் அல்லது நல்ல பெர்ஃபார்மன்ஸ் கொடுத்திருக்கணும்.

விளையாட்டு ஒதுக்கீட்டினருக்கான தேர்வு முறை எப்படி இருக்கும்?

நீங்க உங்களுடைய விளையாட்டு சாதனைகள் மூலமா கூடுதலான மார்க்ஸ் வாங்க முடியும். எழுத்துத் தேர்வு, பிசிகல் டெஸ்ட் (Physical Test) இது எல்லாம் பொதுவான விண்ணப்பதாரர்களுக்கு எப்படி இருக்கோ, அதே மாதிரிதான் உங்களுக்கும் இருக்கும்.

ஆனா, உங்களுடைய விளையாட்டுச் சான்றிதழ்களுக்குன்னு தனியா மார்க்ஸ் போடுவாங்க. அதனால நீங்க உங்களுடைய ஸ்போர்ட்ஸ் சர்டிஃபிகேட்ஸ ரொம்ப பத்திரமா வெச்சுக்கோங்க. அப்ளை பண்ணும்போது எல்லாத்தையும் சரியா சப்மிட் பண்ணுங்க.

PSTM: தமிழ் மீடியம் படிச்சிருக்கீங்களா?

நீங்க தமிழ் மீடியத்துல படிச்சிருந்தீங்கன்னா, இந்த 20% இட ஒதுக்கீடு உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு

PSTM யாருக்கெல்லாம் பொருந்தும்?

நீங்க முதல் வகுப்புல இருந்து உங்க பட்டப்படிப்பு (Degree) வரைக்கும் தமிழ் மொழியில படிச்சிருந்தீங்கன்னா, கண்டிப்பா இந்த PSTM (Persons Studied in Tamil Medium) விருப்பத்தேர்வுக்கு நீங்க தகுதியானவங்க தான். இது ஸ்கூல் படிப்பு மட்டும் இல்ல, காலேஜ்லயும் நீங்க தமிழ்ல தான் படிச்சிருக்கணும். அப்போ தான் இந்த 20% இட ஒதுக்கீட்டுல நீங்க முன்னுரிமை பெற முடியும்.

PSTM ன்னா என்ன? (What is PSTM?)

PSTM ன்னா “Persons Studied in Tamil Medium” னு அர்த்தம். அதாவது, தமிழ் வழியில் பயின்றவர்கள்னு சொல்றோம். TNUSRB SI தேர்வுல, தமிழ்ல படிச்சவங்களுக்குன்னு தனியா 20% இடங்களை ஒதுக்கி இருக்காங்க. இது எதுக்குன்னா, தமிழ்நாட்டுல தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கணும், தமிழ்ல படிச்சவங்களும் அரசு வேலைக்கு வரணும்ங்குறதுக்காக தான் இந்த ஏற்பாடு.

PSTM சான்றிதழ் எப்படி வாங்குறது? எப்படி சமர்ப்பிக்கிறது?

நீங்க PSTM ல வரணும்னா, அதுக்கான சான்றிதழை நீங்க கண்டிப்பா அப்லோட் பண்ணனும். இந்த சான்றிதழ் நீங்க ஒவ்வொரு வருஷமும், அதாவது 1ஆம் வகுப்புல இருந்து டிகிரி வரைக்கும் தமிழ் மீடியத்துல தான் படிச்சீங்கன்னு உறுதி பண்ற மாதிரி இருக்கணும்.

  • உங்களுடைய School Records (பள்ளி சான்றிதழ்கள்) மற்றும் College Records (கல்லூரி சான்றிதழ்கள்) எல்லாத்தையும் எடுத்துக்கோங்க.
  • சில சமயங்கள்ல, நீங்க படிச்ச ஸ்கூல் அல்லது காலேஜ்ல இருந்து தனியா PSTM Certificate கொடுப்பாங்க. அத நீங்க வாங்கி வச்சுக்கோங்க.
  • ஆன்லைன்ல அப்ளை பண்ணும் போது, இந்த சான்றிதழ்களை ஸ்கேன் பண்ணி (Scan) அப்லோட் பண்ண வேண்டியிருக்கும்.

முக்கியமா கவனிக்க வேண்டியது:

நீங்க ஒரு வருஷம் இங்கிலீஷ் மீடியத்துலயோ இல்ல வேற மொழியிலயோ படிச்சிருந்தா கூட, நீங்க இந்த PSTM விருப்பத்தேர்வுக்கு தகுதி பெற முடியாது. நீங்க முழுசா தமிழ்ல படிச்சிருக்கணும்.

சிறப்பு பிரிவினருக்கான சலுகைகள்

முன்னாள் ராணுவத்தினர் / ராணுவத்தில் பணிபுரிபவர்கள் / மத்திய ஆயுதப்படை முன்னாள் வீரர்கள்:

  • தகுதிகள் (Eligibility): நீங்க ராணுவத்துல குறிப்பிட்ட வருஷம் சர்வீஸ் பண்ணி இருக்கணும்.
  • சான்றிதழ் விவரங்கள் (Certificate Details): நீங்க ராணுவத்துல வேலை செஞ்சதுக்கான சரியான சான்றிதழ் கண்டிப்பா இருக்கணும். டிஸ்சார்ஜ் சர்டிபிகேட் (Discharge Certificate) ரொம்ப முக்கியம்.
  • வயது வரம்பு சலுகை (Age Limit Relaxation): உங்களுக்கு வயசுல கொஞ்சம் தளர்வு கொடுப்பாங்க. நீங்க ராணுவத்துல எவ்வளவு வருஷம் வேலை செஞ்சீங்களோ, அந்த அளவுக்கு உங்க அப்பர் ஏஜ் லிமிட்ல இருந்து கழிச்சுக்குவாங்க.

ஆதரவற்ற விதவைகள் (Destitute Widow):

  • தேவையான சான்றிதழ்கள் (Required Certificates): நீங்க ஆதரவற்ற விதவைன்னு நிரூபிக்கறதுக்கான சரியான சர்டிபிகேட் வச்சிருக்கணும். வருவாய் சான்றிதழ் (Income Certificate) மற்றும் கணவர் இறந்ததற்கான சான்றிதழ் (Death Certificate) ரொம்ப முக்கியம்.
  • விதிமுறைகள் (Rules & Regulations): இது சம்பந்தமா கவர்மெண்ட் என்ன ரூல்ஸ் சொல்லியிருக்காங்களோ, அதன்படி நீங்க அப்ளை பண்ணனும்.

திருநங்கைகள் (Transgender):

  • பாலினம் தேர்வு செய்தல் (Gender Selection): நீங்க ஆன்லைன் அப்ளிகேஷன் போடும்போது உங்க ஜென்டரை சரியா செலக்ட் பண்ணிக்கலாம்.
  • சான்றிதழ்கள் (Certificates): நீங்க திருநங்கைன்னு உங்களை அரசாங்கத்துல ரெஜிஸ்டர் பண்ணி இருந்தீங்கன்னா, அதுக்கான ஐடி கார்டு (ID Card) இல்லன்னா சர்டிபிகேட் கண்டிப்பா வச்சிருக்கணும்.
  • தேர்வு முறை (Selection Process): மத்தவங்களுக்கு இருக்கற அதே தேர்வு முறைதான் உங்களுக்கும் இருக்கும். எந்த வித்தியாசமும் இல்ல.

மதிப்பெண் ஒதுக்கீடு (Marks Allocation)

Open Quota விண்ணப்பதாரர்கள் கவனத்துக்கு:

நீங்க Open Quota-வுல அப்ளை பண்ணிருந்தீங்கன்னா, உங்களுக்கு மார்க் எப்படிப் போடுவாங்கன்னு பாருங்க:

  • Tamil Language Eligibility Test: இது Eligibility டெஸ்ட் தான். இதுல நீங்க பாஸ் பண்ணாலே போதும். இதுக்குன்னு தனியா மார்க் எதுவும் கிடையாது.
  • Main Written Examination: இதுதான் ரொம்ப முக்கியமானது. இதுல நீங்க எடுக்கிற மார்க்க வச்சுதான் உங்களோட ரேங்க் வரும்.
  • Physical Efficiency Test (PET): உடல் தகுதித் தேர்வு ரொம்ப முக்கியம். இதுல ஒவ்வொரு ஈவென்ட்க்கும் (Endurance Test, Physical Measurement Test ) குறிப்பிட்ட மார்க் இருக்கும். நீங்க நல்லா பெர்ஃபார்ம் பண்ணா நிறைய மார்க் வாங்கலாம்.
  • Viva-Voce (நேர்முகத் தேர்வு): இதுலயும் உங்களுக்கு மார்க் கொடுப்பாங்க. நீங்க எப்படி பேசுறீங்க, உங்களோட தன்னம்பிக்கை எப்படி இருக்குன்னு எல்லாம் பார்ப்பாங்க.
  • Special Marks: NSS, NCC இல்லன்னா வேற ஏதாச்சும் ஸ்பெஷல் குவாலிஃபிகேஷன் இருந்தா, அதுக்கு எக்ஸ்ட்ரா மார்க் கிடைக்கும்.

தேர்வு நிலைகள் (Stages of Recruitment)

1. எழுத்துத் தேர்வு (Written Examination):

இதுல ரெண்டு முக்கியமான பார்ட் இருக்கு:

  • Tamil Language Eligibility Test (தமிழ் மொழி தகுதித் தேர்வு): இது வெறும் தகுதித் தேர்வுதான் பாஸ் பண்ணா போதும். உங்க தாய்மொழி தமிழ்ல உங்களுக்கு நல்லா எழுதப் படிக்கத் தெரியுதான்னு பார்ப்பாங்க. இதுல நீங்க எடுக்கற மார்க் மெயின் எக்ஸாம் மார்க்கோட சேராது.
  • Main Written Examination (முதன்மை எழுத்துத் தேர்வு): இதுதான் முக்கியமான டெஸ்ட்! இதுல நீங்க எடுக்கற மார்க்க வச்சுதான் உங்கள செலக்ட் பண்ணுவாங்க. இதுல ரெண்டு பார்ட் இருக்கும்:
    • Part A: பொது அறிவு (General Knowledge),
    • Part B: சைக்காலஜி (Psychology), லாஜிக்கல் ரீசனிங் (Logical Reasoning)
  • தேர்வு முறை (Exam Pattern), மதிப்பெண்கள் (Marks), நேரம் (Time), Syllabus Topics இதை பத்தியெல்லாம் இன்னொரு கட்டுரைல ரொம்ப தெளிவா பாப்போம்.

2. Physical Examination (உடல் தகுதித் தேர்வு):

எழுத்துத் தேர்வுல நல்ல மார்க் எடுத்தவங்க அடுத்த ஸ்டேஜ்க்கு போவீங்க. அதுதான் இந்த பிசிகல் எக்ஸாமினேஷன் (Physical Examination).

  • Certificate Verification (சான்றிதழ் சரிபார்ப்பு): முதல்ல நீங்க கொடுத்த எல்லா சர்டிபிகேட்டும் (Certificates) ஒரிஜினலா இருக்கான்னு செக் பண்ணுவாங்க.
  • Physical Measurement Test (உடல் அளவீடு தேர்வு): இதுல உங்க உயரம் (Height), மார்பு அளவு (Chest Measurement) எல்லாம் அளந்து பார்ப்பாங்க. ஆண்கள், பெண்கள்,
  • Endurance Test : இதுல குறிப்பிட்ட தூரம் ஓடணும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேற வேற தூரம் இருக்கும். குறிப்பிட்ட நேரத்துக்குள்ள ஓடி முடிக்கணும்.
  • Physical Efficiency Test (உடல் திறன் தேர்வு): இதுல உங்களுக்கு ஷார்ட் புட் (Short put), லாங் ஜம்ப் (Long jump), ஹை ஜம்ப் (High jump), 100 மீட்டர் ஓட்டம் மாதிரியான ஈவெண்ட்ஸ் இருக்கும். இதுக்கும் மார்க் உண்டு.

ஒவ்வொரு தேர்விற்கான தகுதிகள், அளவீடுகள், விதிமுறைகள், மதிப்பெண்கள் இது எல்லாத்தையும் இன்னொரு கட்டுரையில ரொம்ப தெளிவா பாப்போம்.

3. Viva-Voce (நேர்முகத் தேர்வு):

எல்லா தேர்வுகளையும் முடிச்சதுக்கு அப்புறம் கடைசியா இருக்கறது இந்த “Viva-Voce”ன்னு சொல்ற கலந்துரையாடல். இது ஒரு இன்டர்வியூ மாதிரிதான். உங்களை நேருக்கு நேர் கூப்பிட்டு சில கேள்விகள் கேட்பாங்க. நீங்க எப்படி பேசுறீங்க, உங்களோட தன்னம்பிக்கை எப்படி இருக்கு, ஒரு சூழ்நிலையை எப்படி ஹேண்டில் பண்ணுவீங்கன்னு சில விஷயங்களை அவங்க தெரிஞ்சுக்க முயற்சி பண்ணுவாங்க. இதுல நீங்க அமைதியா, தெளிவா பதில் சொல்லணும். பயப்படாம, தன்னம்பிக்கையோட பேசுங்க. ஏற்கனவே நீங்க படிச்ச விஷயங்கள் சம்பந்தமாவும் கேள்விகள் வரலாம். அதே மாதிரி, பொதுவான விஷயங்கள், நடப்பு நிகழ்வுகள் பத்தியும் தெரிஞ்சு வெச்சுக்கோங்க. இந்த Viva-Voce-ல நீங்க நல்லா பெர்ஃபார்ம் பண்ணுனா, உங்க செலக்சன் வாய்ப்பு இன்னும் அதிகமாகும். சோ, இதுக்கும் நல்லா பிரிப்பேர் பண்ணுங்க!

TNUSRB SI Exam சம்பந்தமா Latest updates, tips எல்லாம் தெரிஞ்சுக்க நம்ம Siva Defence Academy website-ஐ check பண்ணுங்க!

பொதுவான கேள்விகள்:

TNUSRB SI 2025 அறிவிப்பு எப்போது வெளியானது?

04.04.2025 அன்று வெளியானது.

விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?

03.05.2025

TNUSRB SI அதிகாரப்பூர்வ இணையதளம் எது

www.tnusrb.tn.gov.in.

TNUSRB SI தேர்வுக்கான மொத்த காலியிடங்கள் எத்தனை?

1299 + 53* Shortfall.

TNUSRB SI தேர்வுக்கு என்ன கல்வித் தகுதி வேண்டும்?

UGC / அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது என்ன?

20 வயது முதல் 30 வயது வரை.

SC/ST பிரிவினருக்கான அதிகபட்ச வயது வரம்பு என்ன?

35 வயது

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *