Hello Defence Aspirants!
Group ‘Y’ (Non-Technical) Medical Assistant Trade-ல் Airmen ஆக சேர்வதற்கு, தகுதியுள்ள இந்திய ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து IAF விண்ணப்பங்களை வரவேற்கிறது.
இந்த Air Force Open Rally at Kochi (கொச்சியில் விமானப்படை ஆள்சேர்ப்பு முகாம்) தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா மற்றும் யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி & லட்சத்தீவு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்காக பிரத்யேகமாக நடைபெறுகிறது.
இந்த Recruitment Rally, ஜனவரி 29, 2025 முதல் பிப்ரவரி 06, 2025 வரை மகாராஜா கல்லூரி மைதானம், பி.டி. உஷா ரோடு, ஷெனாய்ஸ், எர்ணாகுளம், கொச்சி, கேரளா-682011 என்ற Address-ல் நடைபெற உள்ளது.
Table of Contents
Recruitment Rally Schedule
நேரம்: காலை 6 மணி முதல் தேர்வுகள் தொடங்கும். விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட தேதிகளில் காலை 10 மணிக்குள் (cut-off time) முகாம் நடைபெறும் இடத்திற்கு வந்துவிட வேண்டும்.
தேர்வு அட்டவணை:
| தேதிகள் | தகுதி | நடவடிக்கைகள் | மாவட்டங்கள் |
|---|---|---|---|
| 29 January 2025 முதல் 30 January 2025 (Reporting Date: 29 January 2025) | Group ‘Y’ Medical Assistant (10+2) | Physical Fitness Test, Written Test, Adaptability Test-II & Medical Appointments | தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களின் அனைத்து மாவட்டங்கள். |
| 01 February 2025 முதல் 02 February 2025 (Reporting Date: 01 February 2025) | Group ‘Y’ Medical Assistant (10+2) | Physical Fitness Test, Written Test, Adaptability Test-II & Medical Appointments | தெலுங்கானா, ஆந்திரா, கேரளா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, லட்சத்தீவு யூனியன் பிரதேசங்களின் அனைத்து மாவட்டங்கள். |
| 04 February 2025 முதல் 05 February 2025 (Reporting Date: 04 February 2025) | Group ‘Y’ Medical Assistant (Diploma/B.Sc in Pharmacy) | Physical Fitness Test, Written Test, Adaptability Test-II & Medical Appointments | தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, லட்சத்தீவு யூனியன் பிரதேசங்களின் அனைத்து மாவட்டங்கள். |
யார் விண்ணப்பிக்கலாம்?
இந்திய குடியுரிமை உள்ள ஆண் விண்ணப்பதாரர்கள் இந்த ஆட்சேர்ப்பில் கலந்துகொள்ளலாம்.
Eligibility Criteria
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும்:
1. Age Limit
| Candidate Type | Marital Status | Date of Birth Range |
| 10+2 Candidates | Unmarried | 03 July 2004 – 03 July 2008 (18 to 21) |
| Diploma/B.Sc. in Pharmacy Candidates | Unmarried | 03 July 2001 – 03 July 2006 (19 – 24) |
| Diploma/B.Sc. in Pharmacy Candidates | Married | 03 July 2001 – 03 July 2004 (21 – 24) |
2. Educational Qualifications
- For 10+2 Candidates:
- Passed 10+2/Intermediate with Physics, Chemistry, Biology, and English.
- Minimum of 50% marks in aggregate and 50% in English.
- For Diploma/B.Sc in Pharmacy Candidates:
- Passed 10+2/Intermediate with Physics, Chemistry, Biology, and English with 50% marks.
- Diploma/B.Sc in Pharmacy with 50% aggregate and valid PCI registration.
| Qualification | Subjects | Minimum Marks |
| 10+2/Intermediate | Physics + Chemistry +Biology + English | 50% in aggregate |
| Diploma/B.Sc. in Pharmacy | Pharmacy | 50% in aggregate |
3. இருப்பிடத் தகுதி
கொச்சியில் நடைபெறும் இந்த ஆட்சேர்ப்பு முகாமில் கலந்துகொள்ள, விண்ணப்பதாரர்கள் பின்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்:
- விண்ணப்பதாரர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பள்ளி/கல்லூரி/நிறுவனம், மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்களின் மாவட்டங்களின் புவியியல்/நிர்வாக எல்லைக்குள் அமைந்திருக்க வேண்டும்.
- மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்களின் மாவட்டங்களை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட விண்ணப்பதாரர்கள், இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், தேர்வு தொடங்குவதற்கு முன்பு உரிய அதிகாரியிடமிருந்து Domicile Certificate சமர்ப்பிக்க வேண்டும்.
4. உடல் மற்றும் மருத்துவத் தகுதிகள்
உயரம் (Height): Medical Assistant மற்றும் Medical Assistant (Pharmacist) பணிக்கு குறைந்தபட்சம் 152 செ.மீ.
எடை (Weight): உயரம் மற்றும் வயதிற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும்.
மார்பளவு (Chest): குறைந்தபட்சம் 77 செ.மீ., மூச்சை உள்ளிழுக்கும்போது குறைந்தபட்சம் 05 செ.மீ. விரிய வேண்டும்.
கேட்டல் திறன் (Hearing): சாதாரண கேட்டல் திறன் இருக்க வேண்டும், அதாவது ஒவ்வொரு காதிலும் 6 மீட்டர் தூரத்திலிருந்து மெதுவாகப் பேசும் குரலைக் கேட்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பற்கள் (Dental): ஆரோக்கியமான ஈறுகள், நல்ல பற்கள் மற்றும் குறைந்தபட்சம் 14 dental points இருக்க வேண்டும்.
Corneal Surgery (LASIK/PRK) ஏற்றுக்கொள்ளப்படாது.
பொது ஆரோக்கியம் (General Health): விண்ணப்பதாரர் விமானப்படைக்கு தகுதியானவராக இருக்க வேண்டும், மருத்துவத் தரங்களுக்கு இணங்க வேண்டும். சாதாரண உடலமைப்புடன், எந்தவிதமான குறைபாடும், உறுப்பு இழப்பும் இல்லாமல் இருக்க வேண்டும். எந்தவொரு செயலற்ற அல்லது மறைந்திருக்கும், கடுமையான அல்லது நாள்பட்ட, மருத்துவ அல்லது அறுவை சிகிச்சை குறைபாடு அல்லது தொற்று நோய், தோல் நோய்கள் இல்லாமல் இருக்க வேண்டும். உலகின் எந்தப் பகுதியிலும், எந்த காலநிலை மற்றும் நிலப்பரப்பிலும் பணிபுரிய உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தகுதியுடன் இருக்க வேண்டும்.
Tattoo Policy: நிரந்தர உடல் பச்சை குத்துதல்கள் அனுமதிக்கப்படாது. இருப்பினும், முன்கையின் உட்புறம் (மணிக்கட்டு முதல் முழங்கை வரை), கையின் பின்புறம் (dorsal part) மற்றும் பழங்குடியினரின் பாரம்பரியப் பச்சை குத்துதல்கள் பரிசீலிக்கப்படலாம். புண்படுத்தும், ஆபாசமான, ஒழுக்கமற்ற, பாலியல் ரீதியான அல்லது இனவெறி பச்சை குத்துதல்கள் உடலில் எங்கு இருந்தாலும் தடைசெய்யப்பட்டுள்ளன. பச்சை குத்தியிருந்தால், அதன் இரண்டு அஞ்சலட்டை அளவு புகைப்படங்களை (அருகில் மற்றும் தொலைவில் எடுத்தது) பச்சை குத்தியதன் அளவு மற்றும் வகை விவரங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
Selection Process
1. ஆவணங்கள் சரிபார்ப்பு (Verification of Eligibility)
முகாம் நடைபெறும் இடத்தில், Physical Fitness Test தொடங்குவதற்கு முன்பு, அசல் கல்விச் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். Physical Fitness Test மற்றும் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களின் ஆவணங்கள் பின்னர் விரிவாக சரிபார்க்கப்படும். கல்வித் தகுதிகளை பூர்த்தி செய்யாதவர்கள் நிராகரிக்கப்படுவார்கள். அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்புக்குப் பிறகு திருப்பித் தரப்படும்.
2. Physical Fitness Test (PFT)
- Run: 1.6 km Distance should be completed within:
- 7 minutes for candidates up to 21 years.
- 7 minutes 30 seconds for candidates above 21 years.
- Other Tasks:
- 10 push-ups, 10 sit-ups, 20 squats.

3. Written Test
| Topics | Details |
|---|---|
| Duration | 45 minutes |
| Subjects | English – 20 questions |
| RAGA – 30 questions | |
| Total Questions | 50 questions |
| Marking Scheme | 1 mark for correct answers |
| 0.25 marks deducted for wrong answers |
4. Adaptability Test-II
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறும் அனைத்து விண்ணப்பதாரர்களும் அதே நாளில் அல்லது உள்ளூர் நிலைமைகளைப் பொறுத்து அடுத்த நாள் Adaptability Test-II-க்கு உட்படுத்தப்படுவார்கள். இந்தச் சோதனை இந்திய விமானப்படை சூழலுக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ளக்கூடிய மற்றும் ராணுவ வாழ்க்கை முறைக்கு சரிசெய்து கொள்ளக்கூடிய விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படுகிறது.
5.மருத்துவப் பரிசோதனை (Medical Examination)
Adaptability Test-II-ல் தகுதி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு February 2025-ல் 6 Air Force Hospital Coimbatore-வில் மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும். IAF மருத்துவத் தரங்கள் மற்றும் கொள்கைகளின்படி விமானப்படை மருத்துவக் குழுவால் இந்தப் பரிசோதனை நடத்தப்படும். இதில் பின்வரும் அடிப்படை ஆய்வுகளும் அடங்கும்:
- Blood Haemogram (Hb, TLC, DLC, Platelets)
- Urine RE/ME
- Biochemistry (Blood Sugar Fasting/Post Prandial, Serum Cholesterol, RFT, LFT)
- Radiograph Chest (PA view)
- ECG (R)
- தேவைப்பட்டால் வேறு ஏதேனும் பரிசோதனைகள்.
மருத்துவ ரீதியாக தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்படும் விண்ணப்பதாரர்கள், ₹40/- அரசு கருவூலம்/RBI/SBI மூலம் Electronic Military Receivable Order (e-MRO)/Military Receivable Order (MRO) செலுத்தி Appeal Medical Board (AMB)-க்கு விண்ணப்பிக்கலாம்
| Test | Details |
| Physical Fitness Test | Running, push-ups, sit-ups, squats |
| Written Test | Objective questions on English and RAGA |
| Medical Examination | Comprehensive medical and physical check-up |
Important Documents to Carry:

- Aadhar Card (Original)
- 10th Marksheet (Original)
- 12th Marksheet (Original)
- B.SC/Diploma in Pharmacy Certificate (Original if you have)
- Domicile Certificate (Original)
- Passport size photos – 12 Nos (Within 6 Months)
- NOC, NCC Certificates (if you have)
- Photocopies with self-attested – (4 Xerox in Each Document)
Air Force Open Rally at Kochi Important Dates
| நிகழ்வு | தேதி |
|---|---|
| ஆட்சேர்ப்பு முகாம் (தமிழ்நாடு, 10+2) | 29 January 2025 முதல் 30 January 2025 (Reporting: 29 January 2025) |
| ஆட்சேர்ப்பு முகாம் (தமிழ்நாடு, Dip/B.Sc Pharmacy) | 04 February 2025 முதல் 05 February 2025 (Reporting: 04 February 2025) |
| மருத்துவப் பரிசோதனை | February 2025 |
| Provisional Select List (PSL) வெளியீடு | 14 May 2025 |
| Enrolment List வெளியீடு | 30 May 2025 |
Other Allowances and Perks
- Stipend During Training: ₹14,600 per month.
- Salary Post Training: Starting at ₹26,900 per month with additional allowances.
- Other Benefits:
- Ration, clothing, medical facilities.
- CSD facilities, housing, and transport allowances.
- Group Insurance cover of ₹62.5 lakhs.
பதவிக்காலம் மற்றும் பயிற்சி (Tenure and Training)
ஆரம்பத்தில் 20 வருட காலத்திற்கு சேர்க்கப்படுவார்கள், இது சேவை நிபந்தனைகளுக்கு உட்பட்டு 57 வயது வரை நீட்டிக்கப்படலாம். ஆரம்பத்தில், விண்ணப்பதாரர்கள் Joint Basic Phase Training (JBPT)-க்கு அனுப்பப்படுவார்கள். JBPT-ஐ வெற்றிகரமாக முடித்த பிறகு, குறிப்பிட்ட காலத்திற்கு Trade Training வழங்கப்படும். பயிற்சியின் போது குடும்பத்தினருடன் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
Medical Assistant பணி என்ன?
Medical Assistant ஆக, நீங்கள் நர்சிங் மற்றும் முதலுதவி ஆகியவற்றில் பயிற்சி பெறுவீர்கள். மருத்துவப் பொருட்கள் மேலாண்மை, மருந்தகங்கள் மற்றும் வார்டு மேற்பார்வை மற்றும் பிற விமானப்படை பணிகளிலும் ஈடுபடுவீர்கள்.
Important Points
ஆங்கிலம் மற்றும் இந்தி விளம்பரங்களுக்கு இடையில் ஏதேனும் வேறுபாடு இருந்தால், ஆங்கில பதிப்பே இறுதியானதாகக் கருதப்படும்.
தேர்வு முற்றிலும் தகுதி அடிப்படையிலானது மற்றும் வெளிப்படையானது. யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டாம்.
தேர்வு மையங்களில் Mobile Phones/Smart Watches/Electronic Devices தடைசெய்யப்பட்டுள்ளன.
தேர்வு நடைபெறும் முழு காலத்திற்கும் தங்குவதற்கான ஏற்பாடுகளை விண்ணப்பதாரர்களே செய்துகொள்ள வேண்டும். பயணப்படி/தினப்படி வழங்கப்படமாட்டாது.
இந்த தேர்வு Commissioned Officers/Pilots/Navigators/Agniveervayu பணிகளுக்கானது அல்ல.
For more details about the Air Force Open Rally, visit the official IAF recruitment portal: Airmen Selection Board Official Website
Miscellaneous
| Required Documents PDF | Download |
Frequently Asked Questions
Air Force Open Rally எங்கு நடைபெறுகிறது?
கேரள மாநிலம், கொச்சியில் உள்ள Maharaja’s College Ground
தமிழ்நாடு விண்ணப்பதாரர்களுக்கான (10+2) தேர்வு எப்போது?
தேர்வு 29 January 2025 முதல் 30 January 2025 வரை நடைபெறும்
Medical Assistant பணிக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி என்ன?
10+2 வகுப்பில் Physics, Chemistry, Biology மற்றும் English பாடங்களுடன் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
Air Force Open Rally at Kochi தேர்வு செயல்முறையில் என்னென்ன தேர்வுகள் அடங்கும்?
Physical Fitness Test, Written Test, Adaptability Test-II மற்றும் Medical Examination
பயிற்சி காலத்தில் எவ்வளவு Stipend வழங்கப்படும்?
பயிற்சி காலத்தில் மாதந்தோறும் ₹14,600/- Stipend வழங்கப்படும்.

